2:1 இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2:2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர், என்பவர்கள்
2:3 யூதாவின் குமாரர் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
2:4 அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.
2:5 பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
2:6 சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
2:7 சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
2:8 ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
2:9 எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
2:10 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
2:11 நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
2:12 போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
2:13 ஈசாய் தன் மூத்தகுமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
2:14 நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,
2:15 ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.
2:16 அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகோல் என்னும் மூன்றுபேர்.
2:17 அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.
2:18 எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
2:19 அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
2:20 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
2:21 பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலேயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
2:22 செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
2:23 கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.
2:24 காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
2:25 எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
2:26 அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
2:27 யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
2:28 ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
2:29 அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
2:30 நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
2:31 அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.
2:32 சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான்.
2:33 யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.
2:34 சேசானுக்குக் குமாரத்திகளேயன்றிக் குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
2:35 சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
2:36 அத்தாயி நாதானைப் பெற்றான்;
2:37 நாதான் சாபாதைப் பெற்றான். சாபாத் எப்லாலைப் பெற்றான். எப்லால் ஓபேதைப் பெற்றான்.
2:38 ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
2:39 அசரியா ஏலேத்சைப் பெற்றான்; ஏலேத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.
2:40 எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
2:41 சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான்.
2:42 யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் குமாரருமே.
2:43 எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
2:44 செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
2:45 சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
2:46 காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
2:47 யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
2:48 காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
2:49 அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.
2:50 எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
2:51 பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
2:52 கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
2:53 கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.
2:54 சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதி ஜனங்களுமே.
2:55 யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.

